மேட்டூர்: மேட்டூர் அணையை இன்று மாலை 4 மணிக்கு திறந்து வைத்த
பின்னர் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம்
பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் நீர் திறந்து
விடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து
142 ஆக உயர்த்த தமிழக முதல்வர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். அவர்
சுப்ரீம் கோர்ட்டில் அணுகி அனுமதி பெற்றமைக்காக அவருக்கு பாராட்டு
தெரிவிக்கும் வகையில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர்
சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. வரும் 22 ம் தேதி மதுரையில் இந்த விழா
நடத்தப்படுகிறது.
Comments