இதுவரை ஸ்காட்லாந்தில் நடக்கதாக அளவிற்கு சிறப்பாக கடந்த 11 நாட்கள் நடந்த இப்போட்டிகளின் நிறைவு விழா, நேற்று ஹாம்டன் பார்க் மைதானத்தில் மிகவும் வண்ணமயமாக நடந்தது. சுமார் 40,000 ரசிகர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் 15,000 தன்ஆர்வலர்கள், 1,500 பணியாளர்கள், 30,000 ஒப்பந்ததாரர்கள், 1,800 காவலர்கள் என அனைவரும் மைதானத்தில் வரிசையாக நுழைந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பின் இப்போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. பின் வரும் 2018ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடத்தப்படுவதை தொரிவிக்கும் விதத்தில் காமன்வெல்த் போட்டியில் பயன்படுத்தப்பட்ட கொடி ஒப்படைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பாப் பாடகி மினோக்கின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இறுதியாக ஸ்காட்லாந்து பாப்பாடகி லுாலுா அந்நாட்டின் 'சூட்' பாடலை பாட ரசிகர்கள், பணியாளர்கள், வீரர், வீராங்கனை என அனைரும் மைதானத்தில் நடனமாட மைதானத்தின் வெளியே வண்ணமயமாக வாணவேடிக்கையுடன் விழா கோலாகலமாக முடிவடைந்தது.
Comments