கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்கள் மீட்கும் பணி சுமார் ஒரு
வாரம் நடைபெற்றது. அப்போது, இடிபாடுகளில் சிக்கியிருந்த இரண்டு நாய்கள்
மற்றும் ஒரு காகத்தை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர்.
ப்ளூ கிராஸ் அமைப்பின் பராமரிப்பில் இருந்த அந்த நாய்க்குட்டிகள் ஒன்று
ஏற்கனவே தத்தெடுக்கப்பட்டது. எஞ்சிய மற்றொரு நாய்க்குட்டியை நடிகர்
சத்யராஜ் இன்று தத்தெடுத்துக் கொண்டார். அப்போது, அவரது மகன் சிபி ராஜ்
உடன் இருந்தார்.
மீட்கப்பட்ட காகம் நல்ல ஆரோக்கியம் அடைந்ததை அடுத்து, அது மீண்டும்
பறக்கவிடப்பட்டது.
Comments