என் மாநிலம்
என் மாநிலமான தெலுங்கானாவின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்ட சிறு
விஷயம் பற்றி அரசியல் தலைவர்களும், மீடியாவும் தங்களின் நேரத்தை வீணடிப்பது
என்னை காயப்படுத்துகிறது. இந்த நேரத்தை மாநிலத்தின், நாட்டின் முக்கிய
பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்தலாம்.
இந்தியன்
நான் பாகிஸ்தானைச் சேர்ந்த சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டேன். நான்
ஒரு இந்தியன், என் வாழ்நாள் முழுவதும் இந்தியனாகவே இருப்பேன்.
மும்பை
நான் மும்பையில் பிறந்தேன். நான் பிறக்கையில் என் தாயின் உடல்நிலை மிகவும்
மோசமாக இருந்ததால் மும்பையில் உள்ள மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். நான் பிறந்த 3வது வாரத்தில் என்னை ஹைதராபாத்
தூக்கி வந்தனர். என் முன்னோர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஹைதராபாத்தில்
வசித்துள்ளனர்.
தாத்தா
என் தாத்தா முகமது ஜாபர் மிர்சா ஹைதராபாத்தில் நிஜாம் ரயில்வேயில்
என்ஜினியராக தனது வாழ்க்கையைத் துவங்கினார். அவர் ஹைதராபாத்தில் உள்ள
எங்களின் பாரம்பரிய வீட்டில் தான் இறந்தார்.
கொள்ளு தாத்தா
என் கொள்ளு தாத்தா முகமது அகமது மிர்சாவும் ஹைதராபாத்தில் பிறந்து,
வளர்ந்தவர். பிரபல காந்திபேட் அணை கட்ட என்ஜினியரான அவர் தான் பொறுப்பாக
இருந்தார். என் கொள்ளு தாத்தாவின் தந்தை அஜீஸ் மிர்சா ஹைதராபாத் நிஜாமிடம்
உள்துறை செயலாளராக இருந்தார். 1908ம் ஆண்டு மூசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டபோது நேரம் காலம் பார்க்காமல் நிவாரண பணிகளை மேற்கொண்டவர் அவர்.
கண்டனம்
என் குடும்பம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஹைதராபாத்தில் வசிக்கையில் என்னை
வெளியாள் என்று கூறுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இதன் மூலம்
உங்களின் சந்தேகங்கள் தீரும் என்று நம்புகிறேன் என்று சானியா தனது
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments