திடீரென மாயம், திடீரென வீழ்த்தப்பட்டது போன்று, தொடர்ந்து பயங்கர பாதிப்பை
சந்தித்துள்ள, 'மலேசியா ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம், தன் புகழை தக்க
வைத்துக் கொள்ள, விமான நிறுவனத்தின் பெயரை மாற்றவும், புதிய முதலீடுகளை
சேகரிக்கவும், பல்வேறு புதிய திட்டங்களை பின்பற்ற உள்ளது.கடந்த மார்ச்சில்,
ஐந்து இந்தியர்கள் உட்பட, 239 பயணிகளுடன் திடீரென மாயமான மலேசிய பயணிகள்
விமானத்தின் கதி என்னவென்று இன்னும் தெரியவில்லை. கடந்த 17ல், 298 பேருடன்
சென்ற மற்றொரு மலேசிய விமானம், உக்ரைன் நாட்டில் மர்மமான முறையில் விழுந்து
நொறுங்கியது.
அதை, ரஷ்ய ஆதரவு உக்ரைன் பிரிவினைவாதிகள் தான் சுட்டு
வீழ்த்தினர் என, உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள்
தெரிவித்துள்ளன.இத்தகைய இழப்புகளால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மலேசிய
விமான நிறுவனம், பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது என, விமான நிறுவனத்தின்
மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.நாள்தோறும், 50 ஆயிரம் பயணிகளை ஏற்றிச்
செல்லும் இந்த விமான நிறுவனத்தில், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.
நிறுவனத்தின் அதிக பங்குகளை, மலேசிய அரசே வைத்துள்ளது.
Comments