இலங்கைக்கு அமெரிக்கா கண்டனம்

இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர்களுக்கு, அமெரிக்க துாதரகம் ஏற்பாடு செய்த திறன் மேம்பாடு பயிற்சி வகுப்புக்கு, அந்நாட்டின் ராஜபக்ஷே அரசு, தொடர்ந்து தடை விதித்து வருவதை, அமெரிக்கா நேற்று கண்டித்துள்ளது.உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மாகாணத்தில் செயல்படும் தமிழ் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி முகாமை, அமெரிக்க துாதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த மே மாதத்திலிருந்து மூன்றாவது முறையாக அந்த முகாமை ராஜபக்ஷே அரசு தடை செய்தது.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க துாதரகம், 'பத்திரிகை சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும்; ஊடகங்களை கட்டுப்படுத்தக் கூடாது' என, தெரிவித்துள்ளது.

Comments