காமன்வெல்த் போட்டி: துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம்- இந்தியா 4வது இடத்திற்கு முன்னேற்றம்

காமன்வெல்த் போட்டி: துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம்-  இந்தியா 4வது இடத்திற்கு முன்னேற்றம்கிளாஸ்கோ: கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 50மீ துப்பாக்கி சுடுதல் (பிஸ்டல்) பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. 50 மீட்டர் ஏர்- பிஸ்டல் பிரிவில் இன்று மாலை நடைபெற்ற இறுதிச்சுற்றில் 26 வயதான ஜித்து ராய் 194.1 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான குர்பால் சிங் 187.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் டேனியல் ரெபச்சோலி வெண்கலப் பதக்கம் வென்றார்.

தங்கம் வென்ற ஜிது ராய் 194.1மீ தூரம் ஷூட் செய்து காமன்வெல்த் விளையாட்டுக்களில் புதிய சாதனைப் படைத்துள்ளார். தகுதிச் சுற்றில் ஜிது ராய் 562 புள்ளிகள் பெற்றதும் காமன்வெல்த் ரெக்கார்ட் ஆகும். இதன் மூலம் இந்தியா துப்பாக்கி சுடும் போட்டியில் 4வது தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் பதக்கப் பட்டியலில் 5வது இடத்தில் இருந்து கனடாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு 4-வது இடத்திற்கும் இந்தியா முன்னேறி உள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை 7 தங்கம், 10 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments