1,032 பேர் பலி
இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதல்களில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் 1,032
பேர் பலியாகி இருப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. சுமார் 7 ஆயிரம்
படுகாயமடைந்துள்ளனர்.
2 லட்சம் பேர் அகதிகள்
மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த மண்ணில் அகதிகளாக
இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே ரமலான் நோன்பை முன்னிட்டு 12 மணி நேர யுத்த
நிறுத்தம் கடந்த சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.
யுத்த நிறுத்தத்தை முறித்த இஸ்ரேல்
ஆனால் யுத்த நிறுத்தத்தை சில மணி நேரம் மட்டுமே கடைபிடித்த இஸ்ரேல்
மீண்டும் வெறியாட்டத்தைத் தொடங்கியது. இத்தாக்குதல்களில் கொத்து கொத்தாக
அப்பாவி பொதுமக்களும் பிஞ்சு குழந்தைகளும் பலியாகினர்.
பாலஸ்தீன அரசு தகவல்
இது குறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1032 அப்பாவி பொதுமக்கள் பலியாகி இருப்பதை உறுதி செய்துள்ளது.
42 இஸ்ரேல் வீரர்கள் பலி
இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு எதிராக காஸா பகுதியில் இருந்து ஹமாஸ்
இயக்கமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் 43 இஸ்ரேல் வீரர்கள்
கொல்லப்பட்டுள்ளனர்.
Comments