சமந்தாவுக்கு லண்டனில் ரகசிய சிகிச்சை!

Samantha secret treatment in londonதோல் அலர்ஜி நோய் சமந்தாவை வருத்தி எடுத்து வருகிறது. மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டானபோது ஏற்பட்ட இந்த பிரச்னை இப்போது விஜய்யின் தீரன், சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடிப்பது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அஞ்சான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட இரண்டே நாட்களில் இந்த பிரச்னை விஸ்வரூபமெடுத்ததால், உடனடியாக படப்பிடிப்பில் இருந்து வெளியேறி சிகிச்சை பெற்றார் சமந்தா. அப்போது, படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன லைட்கள்தான் மீண்டும் தோல் அலர்ஜி ஏற்பட்டதற்கு காரணம் என்று மருத்துவர்கள் சொன்னதையடுத்து, சமந்தா சம்பந்தப்பட்ட சீன்களுக்கு பவர்புல் லைட்களை யூஸ் பண்ணுவதை குறைத்துக்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தோல் சிகிச்சையை இப்போது இன்னும் தீவிரப்படுத்தியுள்ள சமந்தா, ஒரு ஹாலிவுட் நடிகை கொடுத்த ஆலோசனைப்படி தற்போது லண்டனில் உள்ள ஒரு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருகிறார். அதனால், மாதம் ஒரு முறையேனும் அங்கு சென்று வரும் சமந்தா, அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறார்.

Comments