அத்வானி விவகாரம் ; பா.ஜ.,வில் சலசலல்பு

புதுடில்லி : பா.ஜ.,வில் மூத்த நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இது குறித்து பா.ஜ., மூத்த நிர்வாகிகள் மட்டுமின்றி தோழமை கட்சியான சிவசேனாவும் கடும் எதிர்ப்பையும், பா.ஜ., குறித்து விமர்சனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

லோக்சபாவுக்கான பா.ஜ., வேட்பாளர் பட்டியில் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த பட்டியில் கட்சியின் தேர்தல் குழு கூட்ட நிர்வாகிகள் எடுக்கும் முடிவின்படி தேர்வு செய்யப்படுகிறது. 7ம் கட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டும் பா.ஜ., மூத்த நிர்வாகிகள் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.


குறிப்பாக பா.ஜ., மூத்த தலைவர் அத்தவானி காந்திநகரில் தான் போட்டியிட வேண்டும் என கட்சி வலியுறுத்தியதாகவும், ஆனால் போபாலில் போட்டியிட விரும்புவதாகவும் முன்னுக்கு பின் முரணான தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து சென்னை வந்த பா.ஜ., அகில இந்திய தலைவர் ராஜ்நாத் கூறும் போது, அத்வானிக்கு காந்திநகர் தான் முடிவு செய்யப்பட்டது. போபால் விருப்பம் என்றால் அவர் தேர்வு செய்து கொள்ளலாம், கட்சி கமிட்டி முடிவையும் மீறி அவர் தானே முடிவு செய்து கொள்ளலாம் என்றார். இந்த பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

சிவசேனா கட்சி கடும் அதிருப்தி : இந்நிலையில் இது குறித்து சிவசேனா கட்சி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. அத்வானியை பொறுத்தவரை அவரது அரசியல் வரலாறு இன்னும் முடிவடையவில்லை. இவருக்கு தகுதியான, நபர் மூத்தவர் யாரும் இல்லை. இவர் எங்களுக்கு தந்தை போன்றவர். அவரது சீட் விவகாரத்தில் கட்சி எடுத்த முடிவுகள் ஏற்று கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது. அத்வானிக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். மோடியை பொறுத்தவரை அவரது அரசியல் வாழ்வு இப்போது தான் துவங்கி வருகிறது.

ஜஸ்வந்த்சிங் கண்ணீர் விட்டார்; இதற்கிடையில் பா.ஜ., மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்கும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். தனக்கு பார்மர் (ராஜஸ்தான் மாநிலம்) தொகுதியை ஒதுக்க வேண்டும். இல்லையேல் நான் தனித்து நின்று வெற்றி பெறுவேன். என்றும் தனது அதிருப்தியை கூறியுள்ளார்.இவரும் சீட் விவகாரம் தொடர்பாக கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நாளை தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிருபர்களிடம் பேசுகையில் அவர் கண்ணீர் விட்டு அழுததது பார்க்க பரிதாபமாக இருந்தது.

காங்கிரசும் எதிர்ப்பு : பா.ஜ.,வினர் மூத்தவர்களை மதிப்பதில்லை எனவும், பா.ஜ., நமது பண்பாட்டிற்கு மதிப்பளிக்கவில்லை எனவும் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா குற்றம்சாட்டி உள்ளார். ஜஸ்வந்த் சிங்கிற்கு தேர்தலில் போட்டியிட கட்சியில் சீட் அளிக்காதது குறித்து இவர்இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காங்., செய்தி தொடர்பாளர் ஷகீல் அகம்மது கூறுகையில், அத்வானி பா.ஜ.,வின் அடையாளம், அரசியலில் மூத்த, நல்ல பாரம்பரியமிக்கவர். மோடி ஒரு கத்துக்குட்டி, அவரே அத்வானியிடம் தான் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Comments