சென்னை: பா.ஜ., தலைமையிலான தே.ஜ.,கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க.,
கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில்
இந்தியா என்பது ' ஐக்கிய இந்திய மாநிலங்கள்' என்று பெயர் மாற்றம் செய்ய
வலியுறுத்துவோம் என்றும், ஈழத்தமிழர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து
தனித்தமிழகத்திற்கு பொது ஓட்டெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும் என்றும்
வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிருபர்களிடம் பேசிய இக்கட்சியின் பொது செயலர் வைகோ நிருபர்களிடம் பேசுகையில்;
எல்லையற்ற மகிழ்ச்சி பெற்றேன்: பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி
மகத்தான வெற்றி பெறும். நான் ஒன்றாம் தேதி சந்தித்த போது நாடெங்கும்
நரேந்திர மோடி அலை வீசுகிறது. பா.ஜ., கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி
அமைக்கும்என்று கூறியுள்ளேன். அதையே இப்போதும் சொல்கிறேன். காங்கிரசுக்கு
ஆதரவு தெரிவிக்கும் எந்தவொரு கட்சியுடனும் நாங்கள் தொடர்பு வைக்க வேண்டும்.
இந்த உடன்பாடு ஏற்பட தொடர்ந்து பாடுபட்டவர்கள் தமிழருவி மணியன். தமிழக
பா.ஜ., தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன். அருமை சகோதரர், விஜயகாந்த், பா.ம.க.,
தலைவர் ராமதாஸ் இந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று நான் தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறேன். இரு அணிகளை வெற்றி பெற இந்த அணி அமைய வேண்டும்
என்று நம்பினேன். இது அறிவிக்கப்பட்ட போது நான் எல்லையற்ற மகிழ்ச்சி
பெற்றேன். காங்கிரஸ் அரசால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின்
காவிரி, பாலாறு, தென்பென்னை, நதி விவகாரத்தில் காங்., அரசு துரோகம்
செய்தது.
கிள்ளி எறிவோம் : தமிழக முல்லை பெரியாறு அணை மட்டம் உயர்த்தி
கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போது , இந்த விவகாரத்தில்
யாரும் தலையிட முடியாது என மத்திய அரசு கொடூர சட்டம் கொண்டு வந்தது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு குப்பையில் போடப்பட்டது. உலகில் எந்த தேசமும்
நதியை யாரும் தடுக்க முடியாது. தமிழக நலனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அணை
பாதுகாப்பு மசோதாவை கிள்ளி எறிய பாடுபடுவோம்,
கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் வேட்பாளர்கள்,
தொகுதி பொறுப்பாளர்கள் அறிவித்தோம். சின்ன பிசிறு கூட இல்லாமல்
அமைந்திருக்கிறது இந்த மகத்தான அணி. எங்கள் கூட்டணிக்கு தமிழக மக்கள்
பெரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன். கூட்டாச்சி தத்துவம் மலர
வேண்டும். ஆழ்ந்த அறிக்கையின் படி ' ஐக்கிய இந்திய மாநிலங்கள்' ( யுனைட்டட்
ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா ) என்று பிரகடனப்படுத்த வேண்டும் என காஞ்சிபுரம்
மாநாட்டில் அறிவித்துள்ளோம். இதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.
மாண்புமிகு முதல்வர் விருதுநகரில் பிரசாரத்தின்போது பல கட்சிகள்
போட்டியிடும், அந்த கட்சிகள் ஜெயிக்க போவதில்லை. அவர்களுக்கு ஓட்டு
போடுவதால் பயனில்லாமல் போய் விடும். அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று
பேசியிருக்கிறார் . இவ்வாறு பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால்
போட்டியிடும் கட்சிகள் ஜெயிக்காது என்று சொல்ல முடியாது . நாங்கள் 40
தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்றுதான் சொல்கிறோம். இவர் இவ்வொறு
சொல்வதென்றால் அ.தி.மு.க, ஜெயிக்குமா ? அ.தி.மு.க., ஆட்சி மெஜாரிட்டியுடன்
நடைபெற்று வருகிறது. அது போல் மத்தியில் மெஜாரிட்டியுடன் மோடி பிரதமராக
வேண்டும். மாநில கட்சிகள் தயவில் இந்தியாவில் காங்கிரஸ் மறைமுகமாக ஆட்சி
வரக்கூடாது, காங்கிரசுக்கு வெளியே இருந்து ஆதரவு என பல கட்சிகள்
அறிவிக்கும், இது நாட்டிற்கு நல்லதல்ல. இந்த நேரத்தில் தே.ஜ., கூட்டணிக்கு
போடாமல் வேறு யாருக்கும் ஓட்டு போட்டால் நன்மை இல்லாமல் போகும். தே.ஜ.,
கூட்டணிக்கு ஓட்டளித்தால் தான் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நன்மை
பயக்கும். பா.ஜ., கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளுக்கு மக்கள் ஓட்டளிக்க
கூடாது. நாட்டின் ஜனநாயகம், மாநில உரிமை பாதுகாக்கப்படும். இவ்வாறு வைகோ
கூறினார்.
தேர்தல் அறிக்கை விவரம்:
தமிழ் ஈழத்தில் பொது ஓட்டெடுப்பு : ம.தி.மு.க., கச்சத்தீவு மீட்பதில்
முழு முயற்சியுடன் நிரந்தர தீர்வு காணப்படும், காவிரி நீர் விவகாரத்தில்
மேலாண் ஆணையம் , காவிரி ஒழுங்கு முறை குழு அமைக்க வலியுறுத்தப்படும்.
காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்க தடை விதிக்க
வலியுறுத்தப்படும். மீனவர் நலனில் அக்கறை, இந்திய ஐக்கிய நாடு என்று பெயர்
மாற்றப்படும். கூடங்குளத்தில் அணுஉலை அமைக்கப்படாமல் தடுக்கப்படும். தேசிய
நதி நீர் கொள்கை ரத்து செய்ய பாடுவடுவோம். உள்ளிட்ட அம்சங்கள் இடம்
பெற்றுள்ளன.
Comments