தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் முதலாவது அலகில் ஏற்பட்ட
பழுதால் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 5
அலகுகளில், தினமும் தலா 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி
செய்யப்பட்டு வருகிறது. இந்த 5 அலகுகளும் 20 வருட ஆயுள் காலத்தை கடந்து
மின் உற்பத்தி செய்து வருகிறது.
அடிக்கடி ஏதாவது ஒரு அலகு பழுதாகி, மின்
உற்பத்தி பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது நேற்று, முதலாவது அலகில்
ஏர் பில்டர் மோட்டார் இயந்திரத்தில் பேரிங் பழுது காரணமாக, அதிகாலை 4:00
மணி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், 210 மெகாவாட் மின்
உற்பத்தி குறைந்துள்ளது. இயந்திர பழுதை சரி செய்யும் பணியில், ஊழியர்கள்
ஈடுபட்டுள்ளனர். இரவுக்குள் பழுது சரி செய்யப்பட்டு, மின் உற்பத்தி
துவங்கும், என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Comments