ஜெ.,க்கு மார்க்., கம்யூனிஸ்ட் கேள்வி

சென்னை: பா.ஜ.,வை விமர்சிக்காதது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய அரசியல் சாசனத்தின்படி உள்ள மதச்சார்பின்மையை பா.ஜ., ஏற்றுக் கொள்ளாது. இதை அவர்கள் போலி மதச்சார்பின்மை என்றே விமர்சனம் செய்கின்றனர்.
இந்துத்துவா கொள்கையின்படி இந்தியா இருக்க வேண்டும், சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே இருக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்தையே பா.ஜ.,வும் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க, பா.ஜ.,விற்கு ஆதரவு தரக்கூடாது என்று ஜெயலலிதா ஏன் பேசவில்லை. இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.

Comments