புதுடில்லி: டில்லி பா.ஜ., அலுவலகம் முன்பு போராட்டம் என்ற பெயரில்
வன்முறையில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், தற்போது
போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். இதனால் இந்த கட்சிக்கு தர்மச்சங்கடமான
நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் வளர்ச்சி பணிகள் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க போகிறேன் என
ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், சென்றார்.
இந்நேரத்தில் தேர்தல் நடத்தை
விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், அனுமதி பெறாமல் சென்றமைக்காக குஜராத்
போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி பா.ஜ.,
அலுவலகத்தை ஆம் ஆத்மி தொண்டர்கள் , நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். இதற்கு
பா.ஜ., தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இரு தரப்பினர் இடையே
கைக்கலப்பு ஏற்பட்டது. இதில் பலர் காயமுற்றனர். இதனால் பெரும் பதட்டம்
நிலவியது.
தேர்தல் கமிஷன் நோட்டீஸ்:
டில்லி
பா.ஜ., அலுவலகம் மற்றும் தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விஷயத்தில்,
அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவது அனைத்தும் பொய். அவர் பொய் பேசுவதையே வழக்கமாக
கொண்டிருப்பவர். பா.ஜ., அலுவலகத்தின் மீது, ஆம் ஆத்மியினர் தாக்குதல்
நடத்தியதற்கு, அவர்களின் விரக்தியும், ஏமாற்றமுமே காரணம் என, டில்லி பா.ஜ.,
தலைவர் ஹர்ஷவர்த்தன் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக டில்லி போலீசார் , கலவரத்தில் ஈடுபடுதல், பொது
மக்களுக்கு இடையூறு, உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஆம் ஆத்மி
தொண்டர்கள் 14 பேரை இன்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில்
விடுவிக்கப்பட்டனர். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் அசுதோஷ்,
ஷாஜியா லிமி ஆகிய இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
இருவரிடமும் போலீசார் கேள்வி கேட்டு விசாரித்து வருகின்றனர். இருவரும் கைது
செய்யப்படுவார்கள் என்று டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
இது குறித்து இருவரும் கூறுகையில் , நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றனர். இதற்கிடையில் ஆம் ஆத்மியின் நடவடிக்கை குறித்து தேர்தல் கமிஷனிடம் பா.ஜ., புகார் அளித்துள்ளது. தேர்தல் கமிஷன் இந்த கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
இந்த கைது ஒரு தலைப்பட்சமானது என்று இந்த கட்சியின் மூத்த நிர்வாகி
பிரசாந்த் பூஷண் கருத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் பா.ஜ.,வும்,
காங்கிரசும் மறைமுகமாக கை கோர்த்துள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக அவர்
கூறினார்.
கெஜ்ரிவால் பொய்யர்: டில்லி பா.ஜ., அலுவலகம் மற்றும் தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விஷயத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவது அனைத்தும் பொய். அவர் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பவர். பா.ஜ., அலுவலகத்தின் மீது, ஆம் ஆத்மியினர் தாக்குதல் நடத்தியதற்கு, அவர்களின் விரக்தியும், ஏமாற்றமுமே காரணம் என, டில்லி பா.ஜ., தலைவர் ஹர்ஷவர்த்தன் கூறினார்.
Comments