நாகர்கோவில்:''இந்தியாவின் பெயரை மாற்ற விரும்பினால், 'பாரதம்' என்றுதான்
மாற்ற வேண்டும்,'' என, ம.தி.மு.க., வின் 'இந்திய ஐக்கிய நாடுகள்'
கோரிக்கைக்கு, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி
கொடுத்துள்ளார்.கன்னியாகுமரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்,
நாகர்கோவில் வந்தார். அவருக்கு ஆரல்வாய்மொழியில், கூட்டணி கட்சியினர்
வரவேற்பு கொடுத்தனர். பின், தோவாளையில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர்,
நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் பா.ஜ., கூட்டணிதான் முதன்மையானது.
முதன்முறையாக அ.தி.மு.க.,- தி.மு.க., அல்லாமல் கூட்டணி அமைந்துள்ளது.
இக்கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்.கோவையில் வேட்பாளர் மாற்றப்படுவாரா?
என்பது உட்கட்சி பிரச்னை. அதுபற்றி வெளிப்படையாக பேசமுடியாது. இந்தியா என்ற
பெயரை மாற்ற வேண்டும் என்றால், 'பாரதம்' என்றுதான் மாற்ற வேண்டும்.'நாடு
முழுதும் உள்ள முதல்வர்களின் கருத்துக்களை எடுத்துக்கொண்டு, மாநிலத்தின்
உணர்வுகளை புரிந்து கொண்டு பணிபுரிபவராக, பிரதமர் இருக்க வேண்டும்' என,
நரேந்திரமோடி கூறியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
Comments