அவரது அறிக்கை:
தி.மு.க.,வில்,
குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை; அவர், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லவும்
தடை விதிக்கப்படவில்லை.
கட்சியின் முன்னணிப் பேச்சாளர்கள் அனைவரும், என்
சுற்றுப்பயணம் வெளி வருவதற்காக காத்திருந்தனர். காரணம், எந்த தேதியில்
நான், எந்த ஊரில் கலந்து கொள்கிறேன் என்பதைப் பொறுத்து, அவர்களுடைய
நிகழ்ச்சிகளை வகுத்துக் கொள்வதற்காக தான் தாமதம். தற்போது, என்
சுற்றுப்பயணம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் சுற்றுப்பயணங்கள்
தலைமை நிலையத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் அவை வெளிவந்து
விடும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார். தமிழகம் மற்றும்
புதுச்சேரியின், 40 லோக்சபா தொகுதிகளில், கருணாநிதி தலைமையிலான, தி.மு.க.,
35 இடங்களில் போட்டியிடுகிறது.
Comments