சென்னை: அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகுவதாக மார்க்சிஸ்ட் மற்றும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து
விலகும் முடிவை சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூட்டாக அறிவித்தனர்.
மேலும் அவர்கள், அ.தி.மு.க.,வின் அணுகுமுறையால் தொகுதிப்பங்கீடு
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. லோக்சபா தேர்தலில் இடதுசாரிகள்
இணைந்து, தனித்து போட்டியிடும் என கூறினர்.
Comments