மண்டலா : மத்திய பிரதேசத்தின் மண்டலா பகுதியில் மலைவாழ் மக்களுடன்
கலந்துரையாடிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், அப்பகுதி மக்களின் குறைகளை
கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது : நீங்கள் சந்திக்கும்
உங்கள் பிரச்னைகளை எங்களிடம் கூறுங்கள்; அதனை கேட்க நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார். தங்கள் குறைகளை தெரிவித்த மலைவாழ் இன
பெண்கள், தங்கள் கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை எனவும், இந்திரா
அளித்த திட்டங்களின் நன்மைகளை தாங்கள் அனுபவித்து வருவதாகவும்
தெரிவித்துள்ளனர்.
Comments