சென்னை : லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை ( வாக்குறுதிகள்)
ம.தி.மு.க, இன்று (22 ம் தேதி சனிக்கிழமை ) வெளியிட்டது. தமிழகத்தில் பூரண
மதுவிலக்கு, இலங்கை தமிழர் நலன், நதி நீர் இணைப்பு, மாநில உரிமை பாதுகாப்பு
உள்ளிட்ட விஷயஙங்கள் முக்கிய அம்சங்கள் ஆகும்.
ம.தி.மு.க, பொது செயலர் வைகோ வெளியிட்ட தேர்தல் அறிக்கை முழு விவரம் வருமாறு :
* முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்த உறுதி.
* தேசிய நீர்க்கொள்கை 2012ஐ ரத்து செய்ய வலியுறுத்தப்படும்.
* அரசியலமைப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
* இளைஞர்களுக்கு இலவச விளையாட்டு பயிற்சி .
* வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை கிளை அலுவலகத்தை சென்னை துவக்கப்படும்.
* வெளிநாட்டு தமிழர்களின் பிரச்னைக்கு உடனடி தீர்வு
* மீனவர் பிரச்னையில் கடுமையான நடவடிக்கை எடுக்க போராடுவோம்.
* மீனவர் நலனில் அக்கறை செலுத்தப்படும்.
* தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.
*கச்சத்தீவு மீட்பதில் முழு முயற்சியுடன் நிரந்தர தீர்வு காணப்படும்
* காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* கூடங்குளத்தில் அணுஉலைகளை மூட வலியுறுத்தப்படும், கூடங்குளத்தில் மேலும் அணுஉலைகள் அமைக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Comments