அதிசயம் நடந்தால் மட்டுமே காங்., ஜெயிக்கும்

புவனேஸ்வர் : ஒடிசாவில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஒடிசா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : ஒடிசா மாநிலத்திற்கு காங்கிரஸ் அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை; லோக்சபா தேர்தலுக்காக ஒடிசா மாநில வேட்பாளர்களாக காங்கிரஸ் அறிவித்துள்ள பட்டியல் அதிர்ச்சி அளிக்கிறது;
ஒடிசா, தமிழகம் போலோ, ஆந்திரா போலவோ கிடையாது; ராஜ்யசபா தேர்தலிலும் உங்களின் பிரதிநிதிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை; மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதிசயம் நடந்தால் மட்டுமே ஒடிசாவில் காங்., வெற்றி பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments