கோல்கட்டா: தனியார் டிவிக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ்
கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் நிலையான அரசு அமைய வேண்டும் என விருப்பம். தேசிய அரசியலில்
திரிணமுல் முக்கிய பங்க வகிக்கும் என்பதை மறுக்க முடியாது. சமூகத்திற்கு
அன்னா பல பணிகளை நிறைவேற்றியுள்ளார்.ஆம் ஆத்மிக்கு பதிலடி கொடுக்க அன்னா
எனக்கு ஆதரவு தரவில்லை. தேசிய நலனுக்காக அன்னா எனக்கு ஆதரவு
கொடுத்துள்ளார். பல விவகாரங்களில் காங்கிரஸ் மற்றும்பா.ஜ.,இணைந்து
செயல்பட்டுள்ளன.
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி ஒரு வகுப்புவாதி.பிரதமராக
நான் ஆசைப்படவில்லை. பிரதமர் வேட்பாளர் பதவிக்கு முதல்வர் ஜெ.,வை
ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என கூறினார்.
Comments