லக்னோ : உ .பி., மாநிலத்தில் போட்டியிடும் காங்., துணை தலைவர் ராகுல்
மோசமான தோல்வியை சந்திப்பார் என்றும், இந்த தொகுதியில் (அமேதி) தமக்கே
வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் ராகுலை எதிர்த்து போட்டியிடும் ஆம்
ஆத்மி கட்சியின் வேட்பாளர் குமார் விஸ்வாஸ் கூறியுள்ளார்.
இவர் மேலும் கூறியிருப்பதாவது ;
உ. பி.,யில் லோக்சபா தேர்தலில்
காங்கிரசுக்கு பெரும் வீழ்ச்சி ஏற்படும். ஆளும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன்
சமாஜ்கட்சி ஆகியவற்றுக்கும் இந்த தோல்வி வரும். இந்த தொகுதியில் நாங்கள்
வரலாறு காணாத அளவிற்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம். தொகுதி முழுவதும்
வாக்களர்களிடம் எங்கள் கட்சி தொண்டர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.
ராகுல் நிச்சயம் தோல்வியை சந்திப்பார். எனக்கு நம்பிக்கை உள்ளது ராகுல்
தோல்வி என்பதை விட நான் கூடுதல் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெறுவேன்.
எங்கள் கட்சியின் வருகையால் அரசியல் கட்சிகளுக்கு
கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சோனியா குடும்பத்தினருக்கு நாங்கள்
ஒரு பெரும் சவாலாக இருப்போம். கடந்த 30 ஆண்டுகளாக சோனியா குடும்பத்தினர்
இங்கு இருந்தும் எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை. பலரும் இங்கு வறுமையில்
வாடுகின்றனர். சஞ்சய் ( 1980 ) ராஜிவ் (1984), சோனியா (1999), ராகுல் (
2004-2009 ) களில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், ஆனால் இங்கு எவ்வி
வளர்ச்சியும் எய்திடவில்லை. இவ்வாறு விஸ்வாஸ் கூறினார்.
Comments