நாகர்கோவில்: அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். கட்டிய வீடுகளுக்குள் புகுந்த
இரட்டை கருநாகங்கள்தான் கருணாநிதியும், ஜெயலலிதாவும் என்று நாகர்கோவிலில்
நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். கன்னியாகுமரி தொகுதி
பா.ஜ., வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து வடசேரி சந்திப்பில் நடைபெற்ற
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அம்மன்கோயில் கிழக்காலே என்ற சினிமாவுக்கு கீரிப்பாறைக்கு வந்துள்ளேன்.
அங்கு ஏராளமான ரப்பர் மரங்கள் உள்ளது. இங்கு பணிபுரியும் ரப்பர் தோட்ட
தொழிலாளர்கள் பிரச்னையை தீர்த்து வைப்பதாக அ.தி.மு.க.வும்,
தி.மு.க.வுக்கும் கூறி வந்தது. செய்தார்களா? ரப்பர் தொழிற்சாலை என்று மாறி
மாறி சொன்னார்கள். செய்தார்களா?
எனக்கு தமிழ்நாடு மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும். அதற்காக எந்த
தியாகத்தையும் செய்ய நான் தயார். தமிழக மக்களின் நன்மையை தவிர வேறு எதுவும்
வேண்டாம். எனது தொண்டர்கள் சத்தம் போடுவதை யாரும் எதுவும் சொல்ல வேண்டாம்.
நான் சொன்னால் அவர்கள் கேட்டபார்கள். இல்லையென்றால் நானே எகிறி
குதிப்பேன். நான் காசு வாங்குவதாக சொல்கிறார். எனக்கு ராஜ்யசபா எம்.பி.
தருவதாக சொன்னார்கள். பெட்டி வாங்கும் பழக்கம் யாருக்கு <உண்டு என்பது
மக்களுக்கு தெரியும்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பட்டா பூமியில் சர்ச் கட்ட அனுமதி
வழங்கப்படும் என்று ஜெ., சொன்னார். செய்தாரா? மீனவர்கள் பிரச்னையை
தீர்த்தார்களா? ராஜ்நாத் சிங் சென்னையில் பேசும்போது மீனவர் பிரச்னைக்கு
முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறினார். தஞ்சாவூரில் இன்று ஒன்பது
மணி நேரம் மின்தடை என்று எனது மொபைலில் மெசேஜ் வந்துள்ளது. 9 மணி நேரம்
மின்தடை என்றால் இது நாடா? சுடுகாடா? குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள்
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 76 ஆயிரம் ஏக்கர் மக்கள் நிலத்தை
எடுத்துள்ளனர். கேட்டால் விலங்குகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமாம். இங்கு
மக்களுக்கு தண்ணீர் இல்லை.
தமிழகத்தின் நலனுக்காக நரேந்திரமோடியிடம் சென்று என்னால் சண்டை
போடமுடியும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கர சாலையை கொண்டு
வந்தவர் வாஜ்பாய். சிறுபான்மையினரின் உண்மையான விரோதிகள் கருணாநிதியும்,
ஜெயலலிதாவும்தான். தமிழ்நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க நான் இருக்கிறேன்.
இந்தியாவில் லஞ்சத்தை ஒழிக்க நரேந்திரமோடியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
ஓட்டு போடும் போது ஜாதி மதம் பார்க்க கூடாது. கக்கனும், காமராஜரும் ஏழையாக
வந்தார்கள். ஏழையாகவே இருந்தார்கள். கருணாநிதியும் ஏழையாகவே வந்தார். ஆனால்
என்ன ஆனது. அம்மா தண்ணீர், அம்மா <உணவகம் என்று பெயர் வைக்கிறீர்களே
அம்மா டாஸ்மாக் என்று பெயர் வைக்க தைரியம் இருக்கறதா? ஏன்னா ஒட்டு குறைந்து
விடும். எம்.ஜி.ஆர். கட்டிய வீட்டில் புகுந்த கருநாகம் ஜெயலலிதா. அண்ணா
கட்டிய வீட்டில் புகுந்த கருநாகம் கருணாநிதி. ஒரு பாம்பை கண்டாலே படை
நடுங்கும் என்றார்கள். இரட்டை பாம்புகளால் தமிழகத்தின் நிலை என்ன?
அ.தி.மு.க. ஆட்சியில் சிமின்ட், ஜல்லி, மணல் விலை <உயர்வால் கட்டுமான
தொழிலே தமிழகத்தில் நசிந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
Comments