இந்த கூட்டத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் பங்கேற்றுள்ளதாக
பா.ஜ.,வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில்,
மக்கள் இங்கு செங்கடலாக திரண்டு வந்துள்ளனர். செம்புயலாக
உருவெடுத்துள்ளனர். செம்படையின் அலை நாளை சுனாமியாக உருவெடுக்கும்.
வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி காணாமல் போகும்.
பா.ஜ., விவசாயிகள் பக்கமே எப்போதும் நிற்கும் . இந்தியாவில் மாற்றம்
உருவாக்க விரும்பினால் இதற்கான போராட்டம் உ .பி.,யில் இருந்து துவங்க
வேண்டும் என்பது நான் அறிந்துள்ளேன். இது தான் டில்லிக்கு செல்லும் பாதையாக
இருக்க முடியும். இங்கு ஆளும் நபர்கள் கலாச்சாரத்தை சீரழித்து
வருகின்றனர். இவர்களுக்கு இனியும் ஓட்ளிக்காதீர்கள். லக்னோ வரும்
போதெல்லாம் எனக்கு வாஜ்பாய் நினைப்புத்தான் வருகிறது. அவரிடம் இருந்து நான்
அதிக பாடங்களை கற்றுள்ளேன்.
சமாஜ் விரோதி பார்ட்டி: இங்கு ஆளும் சமாஜ்வாடி கட்சி சமாஜ்
விரோதி பார்ட்டி. கடந்த ஒரு ஆண்டில் இங்கு பெண்களுக்கு எதிரான குற்றம்
தொடர்பாக 20 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன, இங்கு 150 மோதல்கள்
ஏற்பட்டன. முலாயம்சிங் இங்கு வளர்ச்சி பணிகள் எதுவும் கொண்டு வரவில்லை.
முஷாப்பர் நகர் கலவரம் உச்சக்கட்டமாக நடந்தது. இங்கு சட்டம் ஒழுங்கு
கெட்டுப்போனது. இவர் வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசுகிறார். ஆனால் நான்
ஆளும் குஜராத்தில் கடந்த 10 ஆண்டில் ஏதேனும் கலவரம் உண்டா ? முலாயம்சிங்
ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறார். குஜராத் குறித்து முலாயம்சிங் தவறான
தகவல்களை தருகிறார். உ.பி.,யில் இளைஞர்கள் யாரும் எதுவும் பெறாமல், காணாமல்
போனால் அது பெரிய விஷயமாக கருத்தப்டுவதில்லை. ஆனால் ஒரு அமைச்சரின் எருமை
மாடு காணாமல் போகும் போது இது பெரிய விஷயமாக எடுத்து கொள்ளப்படுகிறது.
இங்குள்ள மத்திய அமைச்சர் பேனிபிரசாத்வர்மா, சல்மான் குர்ஷித்,
ஜெய்சிவால் ஊழல்வாதிகள். இவர்கள் நல்ல நிர்வாகத்தை தர தவறிவிட்டனர்.
இவர்களுக்கு தலைவராக இருந்த பிரதமரும் ஒரு குற்றவாளி. ஆனால் அவர்கள்
மதச்சார்பின்மை பற்றி பேசுகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர்கள்
இந்த மதச்சார்பின்மையை எழுப்புவர். இதனை தங்களின் மறைவிடமாக வைத்துள்ளனர்.
மோ டி , மோ ' டீ ' : மோடி மேடைக்கு வந்த போது இங்கு கூடியிருந்தவர்கள் மோடி மோ ' டீ ' என கோஷங்கள் விண்ணை அதிர வைத்தன.
Comments