அலகாபாத்: அலகாபாத் கூட்டத்தில் முலாயம்சிங் பேசுகையில், மோடியின்
பிரதமர் கனவு நிறைவேறாது. குஜராத் கலவரத்தில் மோடி உரிய நடவடிக்கை
எடுக்வில்லை. குஜராத்தில் நதிகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளது.
இன்று லக்னோவில் பா.ஜ., பேரணி நடக்கிறது. இதனை விட நமது பேரணியில் அதிகம்
பேர் கூடியுள்ளனர்.
முஸ்லிம் மக்கள் எங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்கள். குஜராத்தில் நடந்த
பல படுகொலைகளுக்கு மோடியே தலைமை வகித்தார். பின்னர் அவர் மன்னிப்பு
கேட்டார். காங்கிரசும், பா.ஜ.,வும் இந்த நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை.
தேசிய தலைவரான சோனியா எப்போதும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகின்றார்.
இவர் தேசி தலைவர் என்றால் வேறு எங்காவது போட்டியிட வேண்டியது தானே ?
இவ்வாறு முலாயம்சிங் பேசினார்.
இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகள் ( 80 ) கொண்ட உத்திரபிரதேச
மாநிலத்தில் இன்று 3 தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர். பா.ஜ., பிரதமர்
வேட்பாளர் நரேந்திர மோடி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், ஆம்ஆத்மி
அரவிந்த் கெஜ்ரிவால், என 3 முக்கிய பிரமுகர்கள் இன்று இங்கு பிரசாரம்
செய்வதால் அரசியல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மோடி ( லக்னோ ) ,
முலாயம்சிங் ( அலாகாபாத்), கெஜ்ரிவால் ( கான்பூர்) இன்று பேசுகின்றனர்.
பா.ஜ.,வை பொறுத்த வரையில், மோடியின் செல்வாக்கை நிலை நிறுத்த பா.ஜ., பல
முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பேரணியில் இது வரை இல்லாத
அளவிற்கு 10 லட்சத்திற்கும் மேலாக தொண்டர்களை குவிக்க திட்டமிட்டுள்ளனர்.
கெஜ்ரிவாலுக்கு கறுப்பு கொடி: இந்த மாநிலத்தில் சாலையில் ஜீப்
மூலம் கெஜ்ரிவால் பேரணியாக புறப்பட்டு சென்றார். பல இடங்களில் ஆதரவார்கள்
மாலை அணிவித்து வரவேற்றனர். ஹார்டோய் என்ற இடத்தில் சிலர்
கறுப்பக்கொடிகளுடன் வந்து கெஜ்ரிவாலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
Comments