இந்த கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: உத்தரபிரதேசத்தில் மோடி அலை
வீசவில்லை. இங்கு வேறு அலைதான் வீசுகிறது. நாங்கள் டில்லியில் 28 இடங்களில்
வெற்றி பெற்றோம். அதற்கு, மக்களிடம் இருந்த, காங்கிரஸ் மீதான கோபமே
காரணம். தற்போது நாடு முழுவதும் மக்களிடம் கோப அலையே வீசுகிறது. அதன்
காரணமாகவே, மக்கள் தெருவில் இறங்கி போராட துவங்கிவிட்டனர்.
நாட்டில் உள்ள அனைத்து எரிவாயு வளங்களையும், முகேஷ் அம்பானிக்கு பா.ஜ.,
விற்று விட்டது. அதையே காங்கிரசும் பின்பற்றி வருகிறது. தேர்தல் செலவுக்கு
அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் கட்சி பணம் வாங்கி உள்ளது. எரிவாயு மோசடி
குறித்து மோடிக்கு கடிதம் எழுதினேன். இதுவரை பதில் இல்லை. ராகுலும்,
மோடியும் அம்பாயின் ஏஜன்ட்டுகள். வரும் லோக்சபா தேர்தலில் நாங்கள் 100
இடங்களில் வெற்றி பெறுவோம்.
ஊழலற்ற இந்தியா: இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் எங்களின்
48 நாட்கள் ஆட்சியைபோல யராவது நடத்தியிருக்கிறார்களா? சொல்ல முடியுமா ?
நான் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கவில்லை. இந்த நாட்டை
காப்பாற்றுங்கள் என கேட்கத்தான் வந்துள்ளேன். ஊழலற்ற இந்தியாவை உருவாக்க
வேண்டும் என்று ஆம்ஆத்மி விரும்புகிறது.
இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
Comments