300 இடங்கள் குறிக்கோள்: வெங்கையா நாயுடு

விஜயவாடா: விரைவில் நடைபெற உள்ள பொது தேர்தலி்ல் 300 இடங்களி்ல் வெற்றிபெறுவதே பா.ஜ.,வின் குறிக்கோள் என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சீமந்திரா பகுதியை சேர்ந்த விஜயவாடாவில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தேசிய கட்சிகளின் துணையின்றி மாநில கட்சிகளால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது.பா.ஜ.,வை பொறுத்த வரையில் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.
மத்திய அரசில் நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் தேர்தலில் போட்டியிட முடியாமல் ஒதுங்கியுள்ளார் .இதே நிலைமையில் தான் மற் ற காங்கிரஸ் தலைவர்களும் உள்ளனர். காங்கிரஸ் க்ட்சி அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது குறி்ப்பாக பொருளாதார முன்னேற்றம் குறித்த வகையில் தோல்வியடைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

Comments