வைகை, பாண்டியன் மின் ரயில்களாக இயங்கின

மதுரை: மதுரையிலிருந்து வைகை, பாண்டியன், திண்டுக்கல் பாசஞ்சர் ரயில்கள், மின் ரயில்களாக நேற்று முதல் இயங்க துவங்கின. படிப்படியாக அனைத்து ரயில்களும் மின் பாதையில் இயக்கப்படவுள்ளன. திண்டுக்கல்-மதுரை-விருதுநகர் லைன் மின்மயமாக்கப்பட்டது. நேற்றிலிருந்து வைகை, பாண்டியன், திண்டுக்கல் ரயில்கள் மின் லைனில் இயக்கப்படுகின்றன.
மதுரை ஸ்டேஷனில் இருந்து, நேற்று காலை சென்னை புறப்பட்ட வைகை இன்ஜின் முன்பு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று இரவு பாண்டியன் மின் ரயிலை மூத்த லோகோபைலட் பழனிச்சாமி, மெக்கானிகல் பிரிவு காசிநாதன் கொடியசைத்து முறைப்படி துவக்கி வைத்தனர். கோட்ட மேலாளர் ரஸ்தோகி, கூடுதல் மேலாளர் அஜித்குமார்,மின் பொறியாளர் சுதிர், இயக்க மேலாளர் ராஜ்குமார், மின் விநியோக அலுவலர் பிரகாஷ், ஸ்டேஷன் மேலாளர் சாலமன் சிவத்தையா பங்கேற்றனர்.

கோட்ட மேலாளர் ரஸ்தோகி கூறுகையில், ""திண்டுக்கல்-மதுரை மின்மயமாக்கும் பணிகள் நடந்துள்ளது. இதன்மூலம் ஒரு ரயில் மதுரையிலிருந்து திருச்சி சென்று திரும்பும்போது, 30 ஆயிரம் ரூபாய் வரை எரிபொருள் செலவு குறையும். விருதுநகர் -நெல்லை மின் மயமாக்கும் பணிகள் 6 மாதங்களில் முடியும்,'' என்றார்.

Comments