இன்று பிரசாரத்தை துவக்குகிறார் கெஜ்ரிவால் : சூடு பறக்கிறது வடமாநில தேர்தல் களம்

புதுடில்லி : பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத்தலைவரும், அக்கட்சியின் தேர்தல் பிரசாரக்கு குழு துணைத் தலைவருமான ராகுலும் வடமாநிலங்கள் பலவற்றிலும் கடந்த சில மாதங்களாக தேர்தல் பிரசாரம் செய்து வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அரியானாவில் தனது தேர்தல் பிரசாரத்தில் குதிக்கிறார்.
.அரியானாவின் ரோக்தக் பகுதியில், அவர் தனது பிரசாரத்தை இன்று துவக்குகிறார்.

டில்லி சட்டசபையை தொடர்ந்து லோக்சபா தேர்தலில் களமிறங்கி உள்ள ஆம் ஆத்மி, மொத்தம் 300 லோக்சபா இடங்களில் போட்டியீிட உள்ளது. சமீபத்தில் ஊழல் தலைவர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. இவர்களை எதிர்த்து போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 20 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி சமீபத்தில் வெளியிட்டது. பின், 7 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலும் வெளியானது. பட்டியலில், எந்த தலைவரை, யார் எதிர்த்து போட்டியிட உள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், அரியாவின் 90 சட்டசபை தொகுதிகளிலும், 10 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், அரியானாவில், தனது முதல் தேர்தல் பிரசாரத்தை துவக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், மற்ற தலைவர்களைப் போல நாட்டின் பல இடங்களிலும் பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments