புதுடில்லி : பெரும் பரபரப்பை எதிர்பார்த்த அரசியல் இன்று நாடு
முழுவதும் பெரும் சூடு பிடித்துள்ளது. பார்லி.,யில் இது வரை நடக்காத
வன்முறை நிகழ்வு நடந்தது. லோக்சபாவில் தெலுங்கானா மசோதா தாக்கல்
செய்யப்பட்டதும், எதிர்ப்பு தெரிவிீத்த ஆந்திர எம்.பி.,க்கள் கையில்
வைத்திருந்த மிளகாய் பொடியை வீசி எறிந்தனர். இதனையடுத்து இரு அவைகளும்
ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று நாடு முழுவதும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு எதிர்ப்புக்களை சந்தித்து வரும் மத்திய அரசுக்கு இன்று பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இன்று டில்லியில் முக்கிய நாள் : தெலுங்கானா
மாநிலம் தொடர்பாக தொடர்ந்து அமளியை ஏற்படுத்தி தங்களின் எதிர்ப்பு மற்றும்
ஆதரவை பார்லி.,யில் எழுப்பி வருவதால் கடந்த ஒரு வார காலமாக பார்லி.,
முடங்கி போயுள்ளது. இந்நிலையில் இன்று தெலுங்கானா மசோதாவை லோக்சபாவில்
தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதா தாக்கல்
செய்யப்பட்டால், பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
முதல்வர் ராஜினாமா ? ஆரம்பம் முதலே தனித்தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு
தெரிவித்து வரும் ஆந்திராவை ஆளும் காங்கிரஸ் முதல்வர் கிரண்குமார் ரெட்டி
இன்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று ஐதரபாத் வட்டாரம்
தெரிவிக்கிறது. பல எம்.பி.,க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதுடன்
தற்கொலை செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கலவரம் வெடிக்கும் அபாயம்: லோக்சபாவில் தாக்கல் ஆகும் போது ஆந்திராவில்
கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதனை யொட்டி இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டில்லியில் ஜன்லோக்பால்: டில்லி சட்சபையில் முதல்வர் கெஜ்ரிவால், ஜன்
லோக்பாலை கொண்டு வருவோம் என அடம் பிடித்து இன்று தாக்கல் செய்வார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும் போது காங்.,
எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், ஆதரவை வாபஸ் பெறும் நிலைக்கு
தள்ளப்படுவர். இதனால் டில்லியில் அரசு கவிழும் என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
டில்லி அரசு தனித்து ஜன்லோக்பால் கொண்டு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை.
இதற்கு சட்ட ரீதியான சிக்கல் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2 முதல்வர்கள் தலை உருளுமா ? எடில்லியில் ஜன்லோக்பால் சட்டம் என்பது
இந்திய அரசியலமைப்பு ரீதியாக பல்வேறு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என
மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார். லோக்பால் என்பது பார்லி.,
மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையே நாம் பின்பற்ற வேண்டும். என்று
தெரிவித்துள்ளார்.
இதனால் இன்று 2 முதல்வர்களின் தலை உருளுமா அல்லது தப்பிக்குமா என்பது இன்று மதியத்திற்குள் தெரிந்து விடும்.
பார்லி.,யில் தீயணைப்பு படை தயார்: எம்.
பி., க்கள் தற்கொலை மிரட்டல் விடுத்திருப்பதால் எந்நேரமும் எதுவும்
நடக்கலாம் என்பதால், தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டு
கொள்ளப்பட்டுள்ளனர். வழக்கம் போல் இன்று பார்லி.,க்குள் வழங்கப்படும்
விசிட்டர் பாஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் ஆலோசனை: இந்நிலையில் தற்போதைய சூழல் குறித்து பிரதமர்
மன்மோகன்சிங் மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த மசோதா
தாக்கல் செய்யலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்றும் ஆலோசிக்ப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை ஒவ்வொரு விதமாக பதிவு செய்துள்ளனர்.
Comments