ராகுலின் தந்தையான ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன்
ஆகியோரின் தூக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் 23ஆண்டுகாலம்
சிறையில் கழித்ததால் அவர்களது விடுதலை குறித்து மாநில அரசு முடிவு
செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து இன்று தமிழக அரசு பேரறிவாளன் மற்றும் ராஜிவ் வழக்கில்
தண்டனை அனுபவித்து வரும் மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு
எடுத்தது. இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவிக்க 3 நாள் கெடுவை மத்திய
அரசுக்கும் தமிழக அரசு விதித்துள்ளது.
இது குறித்து அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் மகனும் காங்கிரஸ்
துணைத் தலைவருமான ராகுல் காந்தி, நான் தூக்கு தண்டனைக்கு எதிரானவன். என்
தந்தை இந்த நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தவர்.
ஒரு முன்னாள் பிரதமரை கொன்றவர்களே விடுதலையானால் இந்த நாட்டில்
சாமானியருக்கு எப்படி நீதி கிடைக்கும்? என்றார்.
Comments