இதுகுறித்து சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு
கருணாநிதி பதிலளித்தார்.
கேள்வி: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க தமிழக
அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், அதனை மத்திய அரசுக்கு
ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்களே, அது பற்றி
உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும். ஒப்புதல் அளிக்குமென்று
நம்புகிறேன். அவர்களும் ஒப்புதல் அளித்து தூக்குத் தண்டனை கைதிகள்
விடுவிக்கப்பட்டால் நாம் மேலும் மகிழ்ச்சி அடையலாம்.
கேள்வி: தமிழக அரசு துரித முடிவு எடுத்திருப்பதாக கருதலாமா?
கருணாநிதி: இது துரித முடிவு அல்ல. 2011ம் ஆண்டிலேயே இந்தக் கருத்தினை நான்
தெரிவித்தபோது அதை ஏற்காமல் ஏகடியம் பேசியவர் தான் தமிழக முதலமைச்சர்
ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு அதே நிலையை அவர் எடுத்திருப்பதை நான்
பாராட்டுகிறேன்.
கேள்வி: தமிழக அரசே விடுவித்திருக்கலாமே; மத்திய அரசுக்கு அனுப்புவது
அவசியமா?
கருணாநிதி: அது பற்றி விரிவாக முன்கூட்டியே யோசித்திருப்பார்களானால்,
இன்றைக்கே அவர்களை விடுதலை செய்திருக்கலாம். தாமதம் ஏற்படாது. தாமதமாக
வந்தாலும் நாம் மகிழ்ச்சியடையக் கூடிய முடிவு ஏற்படுமேயானால் நல்லதுதானே!
தலைவர்கள் வரவேற்பு:
தமிழக அரசின் முடிவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோர்
வரவேற்பு தெரிவித்துள்ளனர். தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன், நெடுமாறன்,
கி.வீரமணி உள்ளிட்டோரும் தமிழக அரசின் முடிவுக்கு வரவேற்பு
தெரிவித்துள்ளனர்.
Comments