அழகிரியால் ஏற்பட்டுள்ள பிரச்னை, நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது

தி.மு.க.,வில், முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சி தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமாகிய அழகிரியால் ஏ

சென்னை அறிவாலயத்தில், நிருபர்களை சந்தித்த கருணாநிதி, 'ஸ்டாலின் உயிருக்கு, மூன்று மாதத்தில் ஆபத்து உள்ளது என, உரத்த குரலில் என்னை, அழகிரி மிரட்டினார்' என்ற, 'பகீர்' தகவலை, வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
கருணாநிதியின் இரண்டாவது மனைவியின் மூத்த மகன் அழகிரி. தி.மு.க.,வில் தென் மண்டல அமைப்பு செயலர் என்ற பதவியில் இருந்தார். தற்போது மதுரை எம்.பி.,யாகவும் உள்ளார். இரண்டாவது மகன் ஸ்டாலின். இவர் கட்சியின் பொருளாளர். இருவருக்கும் இடை யே நடக்கும் மோதலில், கருணாநிதி இப்போது ஸ்டாலின் பக்கம் உள்ளார். அழகிரி, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.


ற்பட்டுள்ள பிரச்னை, நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.
பிறந்தநாள் விழா: அழகிரியின் பிறந்தநாள் விழாவை, மதுரையில், இம்மாதம், 30ம் தேதி சிறப்பாக கொண்டாட, அவரது ஆதரவாளர்கள் தடபுடல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 'பிறந்தநாள் விழாவில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வர்; ஜனநாயக தி.மு.க., என்ற புதுக்கட்சியை, அவர் துவக்க அச்சாரம் போடப்படுகிறது' என்ற பேச்சு, அழகிரி ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளது. அழகிரியின் பிறந்த நாள் விழாவை ஒட்டி, அவருக்கு ஆதரவான போஸ்டர்கள், சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. 'அழகிரியை, கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கினால் தான், அவரது பிறந்த நாள் விழாவுக்கு, கட்சி தொண்டர்கள் செல்ல மாட்டார்கள்' என, கருணாநிதியிடம், ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில், நேற்று நிருபர்களை சந்தித்த கருணாநிதி, சில, 'பகீர்' தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவரது பேட்டி: பொதுவாக, தி.மு.க., தலைவர், பொதுச்செயலர் அல்லது பொருளாளர் மூலமாக செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை பற்றி அறிவிப்பது வழக்கம். அதற்கு மாறாக, செயற்குழு, பொதுக்குழு முடிவுகளை அலட்சியம் செய்து, விமர்சித்து அல்லது கட்டுப்படாமல், கட்சியில் உள்ள யாரும், முக்கியமாக பொறுப்பில் உள்ளவர்கள் நடந்து கொள்வதில்லை. கடந்த சில மாதங்களாக, அழகிரி, தான், கட்சி உறுப்பினர் என்பதை மறந்து, இன்னும் சொல்லப்போனால், தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்புச் செயலர் என்ற பொறுப்பில் இருப்பவர் என்பதையும் மறந்து, பேட்டி கொடுத்தது, தவறான அரசியல் விளைவுகளுக்கு வழி காட்டுவதாக அமையும். அவருக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மீது, ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. உச்ச கட்டமாக, இம்மாதம், 24ம் தேதி, விடியற்காலை என் வீட்டிற்குள், அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம், ஸ்டாலினை பற்றி, புகார் கூறி, விரும்பத் தகாத, வெறுக்க தக்க வார்த்தைகளை மளமளவென்று பேசி, என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே, என் நெஞ்சு வெடிக்கக் கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் கூறினார்.

செத்து விடுவார்: அதாவது, 'ஸ்டாலின், இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார்' என, உரத்த குரலில் என்னிடம் கூறினார். எந்த தந்தையால், இது போன்ற வார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடியும். நான், கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில், அதைத் தாங்கிக் கொண்டேன். நியாயம் கேட்டதாக, இப்போது சொல்கிறார். விடியற்காலை ஆறு அல்லது ஏழு மணிக்கு கட்சித் தலைவரிடம், நியாயம் கேட்க வருவது சரியா என்பதை, நீங்கள் தான் நினைத்து பார்க்க வேண்டும். அவர் வெளியில் வந்து, சொல்லும் குற்றச்சாட்டு, கட்சியில் சில பேர் மீது, குறிப்பாக, அவருக்கு வேண்டிய நண்பர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு என்ற குற்றச்சாட்டு. கட்சியின் மதுரை மாவட்ட செயலர், மூர்த்தி மீது, 'பி.சி.ஆர்., சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசாரிடம் எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும்.
முடியாது: அவர் மீது, கட்சியின் சட்டத்திட்டபடி, பொதுச்செயலர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு நேரில் அல்லது எழுத்துப் பூர்வமாக விளக்கமளித்து பிரச்னையை அணுக வேண்டுமே தவிர, தனக்கு வேண்டிய பழைய நண்பர் கூட்டத்தை வைத்து, சுவரொட்டிகளை ஒட்டுவதும், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதும் எப்படி முறையாகும்? ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும், மகன்கள் என்ற உறவு நிலையில் அல்ல,
கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில், அவர்களில் ஒருவர், நான்கு மாதங்களில் செத்து விடுவார் என, கட்சித் தலைவனாகிய, எனக்கு முன் உரத்த குரலில், ஆருடம் கணிப்பது, யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த கட்சி, அண்ணாதுரை காலத்தில் இருந்து, இதுவரையில், எத்தனையோ சோதனைகளை சந்தித்து விட்டு, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிற இயக்கம். தமிழக மக்கள் வளத்தோடும், வலிமையோடும் வாழ வேண்டும் என்பதற்காக, என், 14வது வயது முதல், இந்த, 91வது வயது வரையில், பல தியாகங்களைச் செய்து, அடக்கு முறைகளை ஏற்று, ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரை உருவாக்கி தந்த, இந்த இயக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறவன் என்ற முறையில், இந்த உண்மை நிலவரத்தை, தமிழ் மக்களுக்கு தெரிவிக்கிறேன். 'அழகிரி மன்னிப்பு கோரினால், தற்காலிக நடவடிக்கை ரத்து செய்யப்படுமா?' என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். எந்த முறைகேடு பற்றியும் எனக்கு தெரியாது.
காங்., கூட்டு: காங்கிரஸ் எங்களைத் தேடி வருவதாக, நான் ஜம்பம் அடித்து கொள்ள விரும்பவில்லை. ஒருவரையொருவர் அரவணைத்து, அணி சேருவது, அந்தந்த கட்சிகளுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல், நடக்க வேண்டிய விஷயங்கள். தே.மு.தி.க.,வுடன் கூட்டணி தொடருவது பற்றி, நாங்கள் ஏற்கனவே சொல்லி விட்டோம். அதற்கு மேல், தொடர வேண்டியவர்கள் அவர்களே தவிர, நாங்கள் அல்ல. இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

Comments