திருநெல்வேலி : நெல்லையில் மேயர் பதவி காலியாவதால் அதிகாரிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெருகிவரும் ஊழல்களால் பொதுமக்கள்
பாதிப்படைந்துள்ளனர். திருநெல்வேலி மாநகராட்சி 1996ல் ஏற்படுத்தப்பட்டது.
இரண்டு முறை தி.மு.க.,வும், தற்போது இரண்டாவது முறை அ.தி.மு.க.,வும் மேயர்
பொறுப்பில் இருந்து விட்டன. மேயர் விஜிலாவின் பதவிக்காலம் இன்னமும் மூன்று
ஆண்டுகள் இருக்கும் சூழலில், அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக்கப்படுகிறார்.
தற்போது மேயர் பொறுப்பில் ஆள் இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழக மாநகராட்சிகளில் நெல்லையில்தான் ஊழல்
மலிந்திருக்கிறது. அ.தி.மு.க.,பொறுப்பிற்கு வந்த பிறகு நடந்த கம்ப்யூட்டர்
மூலம் வரிவிதிப்பு மேற்கொண்டதில் ரூ 10 கோடிக்கும் மேலான அரசுப்பணம்
கையாடல் செய்யப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பாஸ்வேர்டை மாற்றி இரவு
நேரத்தில் வரிவிதிப்பு மேற்கொள்வது, பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு
அதனை மாநகராட்சி கணக்கில் வரவு வைக்காமல், மோசடி செய்தனர். இதுகுறித்து
எழுந்த புகார்களால் குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க மாநகராட்சி
கேட்டுக்கொண்டது.
ஊழலின் ஊற்றுக்கண்ணாக நிர்வாகத்தில் இருப்பவர்களே
சிக்கிக்கொள்வதால், போலீசாரும் மேற்கொண்டு வழக்குபதிவு செய்யாமல் கிடப்பில்
போட்டுவிட்டனர். நெல்லையில் அனுமதி பெறாமல் உள்ள கட்டடங்கள்
நூற்றுக்கணக்கில் உள்ளன. நெல்லை வண்ணார் பேட்டையில் கட்டப்பட்ட ஒரு
தனியார்ஆஸ்பத்திரி விதிமுறைகளை மீறி கட்டியதற்கான "அபராத தொகையை'
தி.மு.க.,பிரமுகர் ஒருவரே மொத்தமாக வாங்கிச்சென்றுள்ளார். மாநகராட்சியில்
உயர் பொறுப்பில் உள்ள பிரமுகர்களே எந்த வித அனுமதியும் இன்றி அடுக்குமாடி
கட்டிடங்களை கட்டிவருகின்றனர். ஆனால் பெயரளவுக்கு வழக்கம்போல யாராவது
அப்பாவிகள் சிக்கினால் அந்த கட்டடங்களுக்கு சீல் வைப்பது போல,
பத்திரிகையாளர்களை அழைத்து படம் காண்பிப்பதை வழக்கமாக்கியுள்ளனர்.
Comments