உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே
நிரூபர்களிடம் பேசுகையில், மாநில அரசுகள் சிறுபான்மை இளைஞர்கள் கைது
தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். சிறையில் விசாரணை இல்லாமல்
அடைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட வேண்டும்.
சிறுபான்மையினர் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினரை கைது செய்யும் முன், அவர்கள் மீதான குற்றச்சாட்டு
குறித்து முழு அளவில் விசாரித்து கொள்ள வேண்டும். பயங்கரவாத தடுப்பு சட்டம்
முறையாக பின்பற்றப்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும் என்றும் பயங்கரவாத
தொடர்பு இல்லை என தெரிந்தால் உடனே விடுவிக்கப்பட வேண்டும் என, மாநில
முதல்வர்கள் அனைவரையும் மீண்டும் நான் கேட்டு கொள்கிறேன் எனவும்
கூறியுள்ளார்.
ஷிண்டேவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது
ஒரு தரப்பு சார்பு அரசியல் என பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேட்கர்
கூறி உள்ளார்.
மேலும் இது ஒரு குறிப்பிட்ட பிரிவினரை திருப்தி படுத்தும் நோக்கில்
செய்யப்படும் அரசியலாக அமைந்துள்ளது. எனவே இதற்கு எங்களின் கண்டனத்தை
தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
Comments