அமைதி காத்திட அழகிரி வேண்டுகோள்

மதுரை: கட்சியின் நடவடிக்கை குறித்து மதுரை தி.மு.க., தொண்டர்கள் அமைதி காத்திட வேண்டும் என, அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க,வில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதும், அவரது ஆதரவாளர்கள் பலரும் அழகிரியை தொடர்பு கொண்டனர். அப்போது அவர் தொண்டர்களிடம், அனைவரும் அமைதியாக இருங்கள் என்று மட்டுமே சொன்னாராம்.
தேர்தல் வருவதை கருதி அழகிரியும், ஸ்டாலினும் ஒருங்கிணைந்து செயல்பட கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக தொண்டர்கள் இன்று நிருபர்களிடம் கூறினர்.

Comments