புதுடில்லி : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 97 காசுகளும், டீசல்
விலை, லிட்டருக்கு, 61 காசுகளும் அதிகரிக்கப்பட்டது. இது, நள்ளிரவு முதல்
அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உற்பத்தி செலவு அதிகாரிப்பு போன்ற காரணங்களால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு, 15
நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையும், வழக்கம் போல் மாதத்திற்கு ஒரு
முறை, டீசல் விலை லிட்டருக்கு, 50 காசுகளும் அதிகரிக்கப்பட்டு
வருகின்றன.அந்த வகையில், நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 75
காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு, 50 காசுகளும் அதிகரிக்கப்பட்டது,
இவற்றுடன் உள்ளூர் வரி, வாட் வரி உட்பட அந்த பகுதிகளுக்கு ஏற்ப விலை
உயர்வு அமலுக்கு வருகிறது.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உற்பத்தி செலவு அதிகாரிப்பு போன்ற காரணங்களால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதன்படி, சென்னையில், 97 காசுகள் உயர்வுடன், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 75.68 ரூபாயை எட்டியுள்ளது. டீசல் விலை, 61 காசுகள் உயர்வுடன், ஒரு லிட்டர், 57.93 ரூபாயை எட்டியுள்ளது.இந்த விலை உயர்வு நியாயமாக, 1ம் தேதியே அமலுக்கு வந்து இருக்க வேண்டும். 'புத்தாண்டை கொண்டாடும் நேரத்தில், மக்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல், இரண்டு நாள் கழித்து அறிவிக்கப்பட்டுள்ளது' என, பொத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
Comments