முதல்ல காதலிக்க விடுங்க: சீறும் ஹன்சிகா

Hansika angry of love newsசிம்பு-ஹன்சிகா காதல் பிரேக் அப் ஆகிவிட்டதா, தொடர்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இருவரும் பேசிக் கொள்வதில்லை. சந்தித்துக் கொள்வதில்லை என்பது மட்டும் உண்மை. சிம்பு நயன்தாராவுடன் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருப்பதும், ஹன்சிகா தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவுடன் நெருக்கமாக இருப்பதும் தலைசுற்ற வைக்கும் விஷயங்கள்.
சிம்பு ஹன்சிகா இருவரும் பேட்டி கொடுக்கும்போதெல்லாம் இருக்கு ஆனா இல்ல. இல்லை ஆனா இருக்கு என்கிற ரீதியிலேயே பேசுகிறார்கள். இப்போது இதே டைப்பில் தன் காதல் பற்றி ஒரு விஷயத்தை ஹன்சிகா கூறியிருக்கிறார்.

"முதலில காதலிக்க விடுங்கள். நாங்கள் அமைதியா இருப்பது நீங்களும் (மீடியாக்கள்) இந்த விஷயத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எங்கள் காதல் எதில் முடியவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? நேரம் வரும்போது மீடியாவுக்கு சொல்கிறேன்" என்கிறார்.

Comments