கோத்தகிரி: கொடநாட்டில், 29 நாட்கள் தங்கியிருந்த, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, சென்னைக்கு சென்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம், 24ம் தேதி, நீலகிரி மாவட்டம், கொடநாடுக்கு வந்தார். கொடநாடு முகாமில் இருந்தப் படியே, அரசு மற்றும் கட்சிப்பணிகளை மேற்கொண்டார்.
கொடநாடு முகாமில், 29 நாட்கள் தங்கியிருந்த, முதல்வர் ஜெயலலிதா, நேற்று பகல், 12:35 மணிக்கு, கொடநாடு பங்களாவில் இருந்து, கர்சன் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள, ஹெலிபேடுக்கு, வாகனத்தில் சென்றார். அங்கிருந்து, பகல், 1:25 மணிக்கு, ஹெலிகாப்டரில், கோவை சென்றார். இதன்பின், கோவை விமான நிலையத்திலிருந்து, தனி விமானம் மூலம், 2:30 மணிக்கு, சென்னை சென்றார். முன்னதாக, நேற்று காலை, 7:30 - 8:00 மணி வரை, கொடநாடு, கர்சன் பகுதியில் புதுப்பிக்கப்பட்டிருந்த, இரண்டு அம்மன் கோவில்கள், விநாயகர் கோவில், மதுரைவீரன் கோவில், ஆகியவற்றில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஜெயலலிதா பங்கேற்றார்.
Comments