பாட்னா: தகவல் தொடர்புக்கான, 'ட்விட்டர்' சமூக வலைதளத்தை, ராஷ்ட்ரிய
ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத்தும், பயன்படுத்த துவங்கியுள்ளார். அதில்
நேற்று அவர், 'என் அரசியல் வாழ்க்கையில் நடந்த சுவையான தகவல்களை, புத்தகமாக
எழுதப் போகிறேன்' என, தெரிவித்துள்ளார்.
பீகாரில் நடந்த,
பல கோடி ரூபாய், கால்நடை தீவன ஊழல் வழக்கில்,
சிறை தண்டனை பெற்று,
ஜாமினில் வெளியே வந்துள்ள லாலு பிரசாத், கடந்த சில நாட்களாக, ட்விட்டர்
இணையதளத்தை பயன்படுத்தி, தகவல்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,
நேற்று அவர் வெளியிட்ட தகவலில், 'விரைவில் புத்தகம் ஒன்றை எழுதப் போகிறேன்.
அதில், என் சிறை வாழ்க்கை மட்டுமின்றி, ஆரம்ப கால அரசியல் பற்றியும்
குறிப்பிட உள்ளேன்' என, எழுதியுள்ளார்.
ட்விட்டர்
இணையதளத்தை, லாலு பயன்படுத்த துவங்கியுள்ளதை, ஜம்மு - காஷ்மீர், தேசிய
மாநாட்டுக் கட்சியை சேர்ந்த, முதல்வர், ஒமர் அப்துல்லா வரவேற்றுள்ளார்.
ஒமரும், ட்விட்டர் இணையதளத்தில், அதிக தகவல்களை பரிமாறிக் கொள்பவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
Comments