என்னை நீக்கியதால் நஷ்டம் பூராவும் திமுகவுக்குத்தான்.. சொல்கிறார் மு.க.அழகிரி

என்னை நீக்கியதால் நஷ்டம் பூராவும் திமுகவுக்குத்தான்.. சொல்கிறார் மு.க.அழகிரிமதுரை: என்னை நீக்கியதால் எனக்கு இழப்பு இல்லை. மாறாக திமுகவுக்குத்தான் நஷ்டம் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக மதுரைக்கு வந்துள்ளார் அழகிரி. இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை நிர்வாகிகள் நீக்கப்பட்டதால் திமுகவுக்குத்தான் இழப்பு.

திமுகவின் நலனுக்காகவே கட்சியை விமர்சித்தேன். அதற்காக என்னை நீக்கியுள்ளனர். இதனால் எனக்குப் பாதிப்பு ஏதும் இல்லை. எனக்கு திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். என்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு தொண்டர்கள் அதிகமாக வர விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார் அழகிரி.

Comments