மம்தா பானர்ஜியை சந்தித்தார் சவுரவ் கங்குலி

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் அரசியலில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் பரவின.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கங்குலி, கிரிக்கெட் தொடர்பாகவே மம்தாவுடன் தான் பேசியதாகவும், அரசியலில் சேரும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார்.

Comments