ரூ 44 கோடி
அதன்படி ஜில்லா முதல் வாரத்தில் தமிழகம் மற்றும் உலகெங்கும் ரூ 44 கோடிக்கு
மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. ரஜினியின் படங்களுக்கு அடுத்து,
இந்த சாதனையைச் செய்துள்ளது விஜய்யின் ஜில்லாதான் என்பது
குறிப்பிடத்தக்கது.
வீரம் அடுத்து...
அஜீத்தின் வீரம் படமும் சிறப்பாக ஓபனிங்கைப் பெற்றுள்ளது. ஆனால் ஜில்லாவை
விட நான்கு கோடி ரூபாய் குறைவான வசூல் என்பதால், இந்தப் படத்துக்கு
இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
ஏன் ஜில்லாவுக்கு அதிக வசூல்?
இரவுக் காட்சி - ஜில்லாவுக்கு அதிகக் கூட்டம்
தமிழகத்தின் கிராமங்கள் சார்ந்த நகரங்களில் ஜில்லாவுக்கு அதிக கூட்டத்தை
பார்க்க முடிந்தது, படம் வெளியான ஒரு வாரம் கழித்தும். இரவுக்
காட்சிகளுக்கு 75 சதவீத கூட்டம் இன்னமும் இந்தப் படத்துக்கு தொடர்வது ஒரு
ஆச்சர்யமான விஷயம்.
இரண்டாவது வாரத்தில் மாறலாம்
ஆனாலும் நேர்மறை பேச்சுகள் காரணமாக இரண்டாவது வாரத்தில் வீரம் வசூல் நிலவரம் மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments