மோடிக்கு கோயில் கட்ட உ.பி., மக்கள் முடிவு

அலகாபாத் : உ.பி.,யின் புறநகர் கிராமப் பகுதியில் உள்ள மக்கள் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர். இதில் மோடி சிலை அமைத்து, மோடி மந்திரம் ஒலிக்கச் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். பக்வன்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மோடியை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கிரமத்தில் உள்ள பழங்கால சிவன் கோயிலில் மோடியின் சிலையை நிறுவி, அதற்கு நமோ நமோ மந்திர் என பெயரிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த கோயிலில் மோடி மந்திரத்துடனான தினசரி பூஜைகள் நடத்த வேண்டும் எனவும், தொடர்ந்து 125 நாட்கள் இந்த பூஜை நடத்தி மோடி நாட்டின் பிரதமராக வாழ்த்த வேண்டும் எனவும் மோடியின் பக்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மோடிக்கான இந்த பூஜை நாட்டிற்கு நன்மையான எதிர்காலத்தை பெற்றுத் தரும் என இக்கோயிலின் புரோகிதர் பிரிஜேந்திர நாராயண மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Comments