புதுடில்லி: 'சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது' என
வலியுறுத்தி, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது. கடந்த, 2005ல், ஐ.மு., கூட்டணியின், முதலாவது ஆட்சியின் போது, சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்டது. 2,100 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, இந்தத் திட்டம் துவக்கப்பட்டது.
நாட்டின் மேற்குப்
பகுதியிலிருந்து வரும் கப்பல்கள், இலங்கையைச் சுற்றி வராமல், நேரடியாக
தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரவேண்டும் என்பதற்காகவே, இந்தத் திட்டம்
துவக்கப்பட்டது. திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின், சிலர், கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தனர்.சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது. கடந்த, 2005ல், ஐ.மு., கூட்டணியின், முதலாவது ஆட்சியின் போது, சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்டது. 2,100 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, இந்தத் திட்டம் துவக்கப்பட்டது.
சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், ராமர் பாலம் இடிபடும் என, காரணம் கூறினர். இந்த வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், பொதுமக்களின், மத உணர்வுகளை காயப்படுத்தாத வகையில், இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என, கேள்வி எழுப்பியது. இந்த அறிவுரையை தீவிரமாக பரிசீலித்து, மாற்றுப் பாதையில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, 4ஏ என்ற பாதையை தேர்வு செய்து, அந்தப் புதிய பாதை வழியாக, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம் என, தீர்மானித்தது. இதையடுத்து, அந்த புதிய பாதையில், சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ந்து, அறிக்கை அளிக்கும்படி, பிரபல நிபுணர் பச்சோரி தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டது. 2007ல் அமைக்கப்பட்ட கமிட்டி, பல்வேறு ஆய்வுகளுக்கு பின், 2013ல் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், சேது சமுத்திர திட்டத்தால், பயன் ஏதும் இல்லை என, குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த திட்டத்திற்காக, 2007ம் ஆண்டு வரை, 767 கோடி ரூபாயை, மத்திய அரசு செலவிட்டுள்ளது. வழக்கு காரணமாக, அப்படியே பணிகள் நிலுவையில் உள்ளன. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு உறுதியாக உள்ளது.இந்நிலையில், இத்திட்டத்திற்கு எதிராக, தமிழக அரசு சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில் கூறியிருந்ததாவது: ராமர் பாலத்தை, புராதன சின்னமாக அறிவிக்கலாம்; மத்திய அரசு இத்திட்டத்தை அமல்படுத்த கூடாது. "சேது சமுத்திர திட்டத்தை, நிறைவேற்றுவது உகந்ததல்ல' என்ற, பச்சோரி குழுவின் அறிக்கையை ஏற்கிறோம்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு, நீதிபதிகள் எச்.எல்.டாட்டூ மற்றும் எஸ்.ஏ.போப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.இதில், மத்திய அரசு சார்பில் வாதாடிய ராஜீவ் தவான், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும்படி கேட்டு கொண்டார். அவருக்கு பதில், கூடுதல் சொலிசிட்டர் பராஸ் குகத் இனிமேல், மத்திய அரசு சார்பில் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டது. அவர் நீதிபதிகளிடம், இந்த வழக்கில், மத்திய அரசின் நிலை குறித்து, மூன்று வாரத்தில் தெரிவிப்பதாக கூறினார்.இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை, மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Comments