ஏற்கனவே ராஜா ராணி படத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஆர்யாவும்,
நயன்தாராவும் சர்ச்சில் திருமணம் செய்வது போல் காட்சி வைக்கப்பட்டு, அதையே
நயன்தாரா - ஆர்யா திருமணம், முதலிரவு என்றெல்லாம் பப்ளிசிட்டி செய்து
பரபரக்க வைத்தார்கள்.
இந்த முறை, சர்ச்சுக்கு பதில் இந்து கோவில் ஒன்றில் சிம்பு - நயன் திருமண
காட்சியை எடுக்கப் போகிறார்களாம். அனுமதி கிடைக்காவிட்டால் செட் போட்டு
படமாக்கத் திட்டமாம்.
சிம்புவும் நயன்தாராவும் முன்னாள் காதலர்களாக இருந்து, ஒரு பெரிய சண்டை -
பிரிவுக்குப் பிறகு இப்போது திரையில் மட்டும் இணைந்துள்ளனர்.
Comments