தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வருமா? ஸ்டாலின் பதில்

திருச்சி: திருச்சியில் நடைபெறும் தி.மு.க., மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என ஸ்டாலின் கூறினார். திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாட்டு பணிகளை பார்வையிட்ட ஸ்டாலின் கூறுகையில், திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாடு வெற்றி மாநாடாக அமையும். பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநாடு திருப்பு முனையாக அமையும்.
தி.மு.க., ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதால், சிவாஜி சிலை அகற்றப்படுகிறது. சிலை அகற்றப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வர்.தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வருவது தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்.

Comments