ஆனால் தற்போதைய நிலையில் திமுக அணியில் இந்த இரு கட்சிகளும் இணையாது
என்றே தெரிகிறது. அதேபோல் அதிமுக அணியில் தொடக்கத்தில் பாஜக இணையலாம் என்று
கூறப்பட்டது. ஆனால் பின்னர் இடதுசாரிகள் தாங்களாகவே அதிமுக அணியில்
இருக்கிறோம் என்று அறிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, இடதுசாரிகளைவிட பாரதிய ஜனதா, மதிமுக, பாமக
ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தால் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்ற கணக்கும்
அதிமுக தலைமையால் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இடதுசாரிகளுடன் கூட்டணியா? அல்லது பாஜக- மதிமுக- பாமகவுடன்
கூட்டணியா? எதன் மூலம் லாபம் என்ற சர்வேயை நடத்த அதிமுக தலைமை
உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Comments