
'லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளால், ஓட்டு
சதவீதம் பெரிய அளவில் உயராது' என்ற உளவுத் துறையின் அறிக்கை, ஆளுங்கட்சி
மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., கூட்டணியில், கடைசி
நேரத்தில் மாற்றம் வரலாம். தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் -
தே.மு.தி.க., கட்சிகள் இடம் பெற்றால், அ.தி.மு.க., அணியில் பா.ஜ., -
ம.தி.மு.க., கட்சிகள் இடம் பெறும் என்ற பேச்சு, அடிப்படுகிறது.
அ.தி.மு.க.,
- பா.ஜ., கூட்டணி அமைந்தால், தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என, ஆய்வு
செய்து அறிக்கை தரும்படி, மும்பையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம், சர்வே
எடுக்க, ஆளுங்கட்சி உத்தரவிட்டுள்ளது. சர்வே பணி வேகமாக நடந்து வருவதாக,
கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments