மாண்டியா தொகுதியில் ரம்யாவை எதிர்த்துப் போட்டியிடத் தயாராகும் நடிகை ரக்ஷிதா!

மாண்டியா தொகுதியில் ரம்யாவை எதிர்த்துப் போட்டியிடத் தயாராகும் நடிகை ரக்ஷிதா!பெங்களூர்: வரும் தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புவதாக நடிகை ரக்ஷிதா தெரவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதி எம்.பி.யாக நடிகை ரம்யா இருந்து வருகிறார். அவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் களம் இறங்குகிறார். இந்த நிலையில், மண்டியா தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிட நடிகை ரக்ஷிதா விரும்புகிறார். இவர் தமிழில் விஜய் ஜோடியாக மதுர படத்தில் நடித்தவர். இதுகுறித்து அவர் மண்டியாவில் நிருபர்களிடம் கூறுகையில், "மண்டியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்த விஷயத்தில் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். நான் நடிப்பதைவிட்டுவிட்டதால் என்னை இனி நடிகை என்று கருத வேண்டாம். நான் எந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவேன். அந்த அளவுக்கு எனக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. அதற்காக நான் கட்சி மாறுவதாக அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ஜனதா தளம் (எஸ்) கட்சியிலேயே இருக்கிறேன். இந்த கட்சி சார்பிலேயே போட்டியிடுகிறேன். ஒருவேளை போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்," என்றார்.

Comments